செய்திகள் உலகம்
இரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நால்வர் பலி
டெஹ்ரான்:
இரான் தலைநகர் டெஹரானில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
கடந்த மாதம் இரான் 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வீசி இஸ்ரேல் மீது நடத்தி துல்லியத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
எனினும், இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை டெஹரானில் உள்ள வான்பாதுகாப்பு தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்தி வானில் அழித்ததாகவும் ஒரு சில மட்டும் காலி இடங்களில் விழுந்ததாக இரான் அறிவித்துள்ளது.
காஸா, லெபனான் என அண்டை நாடுகளில் இஸ்ரேல் கொடூர வான்வழித் தாக்குதலையும், ஹமாஸ்,ஹிஸ்பு அல்லா அமைப்பின் தலைவர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது.
இதற்கு பதிலடியாக இரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரானில் உள்ள அணுசக்தி மையங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்து வந்தது.
இதற்கு இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்கி வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தற்போது இல்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் 4 வீரர்கள் மாண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று இரான் எச்சரித்துள்ளது.
ஈரானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:07 pm
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சிற்பி டாக்டர் முஹம்மது உமர் சாப்ரா 93 வயதில் காலமானார்
June 13, 2026, 4:04 pm
4 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்
June 11, 2026, 12:06 pm
17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது
June 11, 2026, 10:20 am
