நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு: தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சூர்யா வாழ்த்து 

சென்னை: 

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ள சூழலில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜய்க்கு நடிகர் சூர்யா சிவக்குமார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் 

சென்னையில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா, தனது நண்பர் ஒருவர் புதியதொரு பாதையில் பயணிக்கவிருக்கிறார். அவருக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

நடிகர் சூர்யாவின் பேச்சு அரங்கினை அதிர வைத்ததுடன் பலத்த கரவொலிகளும் எழுப்பப்பட்டது. 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset