நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம்: இந்தோனேசியாவில் பரபரப்பு 

ஜகார்த்தா: 

20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அலுவலகம் வந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளது 

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பெண் ஒருவர் தேர்தல் அலுவலக்த்திற்கு வருகை தந்துள்ளார். 

தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அவர் கேட்டுக்கொண்டார். சந்தேகமடைந்த மற்றொரு அதிகாரி அவரின் பெயரை சரிபார்க்க சொன்னார். 

பெயரைச் சரி பார்க்கும் போது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் சம்பந்தப்பட்ட பெண் இறந்து 20 வருடங்கள் ஆகின்றது என்றும் அவர் உயிரோடு இல்லை என்று தெரிய வந்தது 

சிசிடிவி மூலமாக கண்காணிக்கையில் அப்பெண்ணின் உருவம் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் செங்குத்தாக நின்று அங்குள்ளவர்களை பீதியடைய செய்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset