நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மின்னியல் சிகரெட் விற்பனைக்குப் பிரிட்டன் அரசாங்கம் தடை விதிக்கவிருக்கிறது 

லண்டன்: 

மின்னியல் சிகரெட் அல்லது பயன்படுத்தப்பட்ட வேப் வகையிலான பொருட்கள் யாவும் விற்பதை பிரிட்டன் அரசாங்கம் தடை விதிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது 

வரவிருக்கும் கோடை பருவத்தில் பிரிட்டன் அரசாங்கம் இந்த தடை உத்தரவை வெளியிடவுள்ளது 

இந்த விவகாரம் தொடர்பாக புதிய சட்ட அமலாக்கம் எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதி 2025ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் புறநகர் நல விவகார பிரிவு குறிப்பிட்டது 

பிரிட்டன் அரசாங்கம், உள்ளூர் நகர அமலாக்கத்துறைகளுக்கு இந்த விவகாரம் தொடர்பாக தன்னிசையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதனால் தடை உத்தரவு குறித்த தேதி தொடர்பாக ஒருமனதாக முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது 

கடந்தாண்டில் பிரிட்டனில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் பயன்படுத்தப்பட்ட மின்னியல் சிகரெட்டுகள் குப்பைகளாக வீசப்படுகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset