நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெங்களூருவில் ஒரே நாளில் 140 மி.மீ.கன மழை

பெங்களூரு:

பெங்களூரில் பலத்த மழையால் 7 மாடி கட்டடம் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென் கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

பெங்களூரில் மட்டும் ஒரே நாளில் 140 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 3 நாள்களாக பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset