நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது

புது டெல்லி:

குஜராத்தின் காந்தி நகரில் போலி நீதிமன்றத்தை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கே உத்தரவு பிறப்பித்த போலி நீதிபதி சாமுவேலை போலீஸார் கைது செய்தனர்.

தீர்ப்பாயத்தின் நீதிபதியாக சாமுவேல் அறிமுகப்படுத்தி போலி நீதிமன்றத்தில் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்து அமைப்புளுடன் வழக்கு விசாரணை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதில் ஒரு தரப்பிடம் இருந்து குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமான உத்தரவைப் பிறப்பிப்பது சாமுவேலின் வழக்கம்.

அப்படி, அரசு நிலத்துக்கு வருவாய் ஆவணங்களில் ஒருநபரின் பெயரை சேர்க்குமாறு பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்சியருக்கு சாமுவேல் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை இணைத்து சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது சாமுவேல் நீதிபதி இல்லை என்பது தெரியவந்தது.

நீதிமன்ற பதிவாளர் புகார் அளித்ததையடுத்து சாமுவேல் கைது செய்யப்பட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset