நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 ஆடுகள் பறிமுதல்

பாசிர்மாஸ்:

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 ஆடுகளை பொது நடவடிக்கைப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அசான்  இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இங்குள்ள கம்போங் ரெபெக்கில் 55,000 ரிங்கிட் மதிப்புள்ள 44 ஆடுகளைக் கைப்பற்றப்பட்டது.

இதன் மூலம் ஆடு கடத்தல் கும்பலில் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் 2,200 கிலோ கிராம்  எடையுள்ள 44 ஆடுகள் சரியான ஆவணங்கள் இல்லாமல் லோரியில் இருப்பது சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட கும்பல் ஆடுகளை கடந்தி வந்த பின் அதனை புதர்கள், கொட்டகைகளை மறைத்து வைக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset