நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்.

சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஶ்ரீ பூங் மொக்தார் ராடின் இதனை கூறினார்.

வரவிருக்கும் 17ஆவது சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன்  ஒத்துழைக்க அம்னோ முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து சபாவை அகற்றும் திறன் கொண்ட ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

சபாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அளவில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோன்கோட், பெலுரான், பிதாஸ், கினபாத்தாங்கான், கோத்தா மாருடு, துவாரான், ரனாவ், லஹாட் டத்து உள்ளிட்ட எட்டு ஏழ்மையான மாவட்டங்களுடன் நீண்டகால வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகையால் பின்தங்கிய நிலையில் இருந்து மாநிலத்தின் நிலையை உண்மையில் மாற்றக்கூடிய ஒரு புதிய மாற்றத்தை சபா செயல்படுத்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset