நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்

கோலாலம்பூர்:

தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் ஆணின் ஹானர் கைப்பேசியை எடுத்துக் கொதிக்கும் சூப்பில் போட்ட காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது.

உணவருந்தி கொண்டிருந்த நிலையில் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவதம் தீவிரமடைந்த நிலையில்  ஆத்திரமடைந்த பெண் முதலில் ஆணின் ஹானர் கைப்பேசியைத் தூக்கி எறிந்தார். 

அதனை அந்த ஆண் எடுத்துப் பார்க்கும் பொழுது அதே ஹானர் கைப்பேசியை  பிடுங்கி அப்பெண் சூப்பில் போட்டார். 

அந்த ஆண் சூப்பிலிருந்து ஹானர் கைப்பேசியை எடுத்து அழைப்புக்குப் பதில் சொல்வது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சிலர் ஹானர் கைப்பேசியை " “King of Durability” என்று பதிவிட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset