நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது 

கோலாலம்பூர்: 

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தி மைன்ஸ், ஶ்ரீ கெம்பாங்கானை நோக்கி செல்லும் சுங்கை பீசி நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று கோலாலம்பூர் விசாரணை பிரிவு, சாலை போக்குவரத்து அமலாக்கத்துறை தலைவர் துணை ஆணையர் முஹம்மத் ஸம்ஸுரி முஹம்மத் இசா கூறினார். 

பிற்பகல் 2.34 மணிக்கு நிகழ்ந்த இந்தழ்ச் சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பாதிக்கப்பட்டார். தெர்மினல் பெர்செபாடு செலாத்தான் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியது. 

இதனால் பாதிக்கப்பட்ட நபர் வேக கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் இந்த வாகனமோட்டி அங்கிருந்து வேகமாக சென்றார் என்று அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் தகவல் வழங்க விரும்பினால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 

முன்னதாக, சாலை விபத்து தொடர்பான ஒரு நிமிட காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset