நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு

கோலாலம்பூர்:

நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியது என்று கூறிய தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 

தான் நிதியமைச்சராக இருந்த இந்த மூன்றாண்டுகளில் நாட்டில் ஏழ்மை நிலையில் வாழும் 66.7 விழுக்காடு  மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளைச் செய்ததாகவும் பிரதமர் அன்வார் விளக்கினார். 

இன்னும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களைக் கண்டறிந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய மடானி அரசு முன் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். 

2023-ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் அன்வார் நிர்வாகம் உறுதியளித்தபடி, ஏழ்மை நிலையை ஒழிக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று கூறிய ரந்தாவ் பன்ஜாங்  ரந்தாவ் பன்ஜாங் சித்தி ஜைலா முஹம்மத் யூசோப்பின் கூற்றுக்குப் பிரதமர் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், வறுமையை ஒழிப்பதில் அரசாங்கம் இனப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, அனைத்து இன மக்களின் நலனும் கருத்தில் கொள்ளப்படும் என்று அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset