நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 293,000க்கும் மேற்பட்ட நபர்கள் வேலையை இழந்துள்ளனர்: மனிதவள துணையமைச்சர்

கோலாலம்பூர்:

நாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 293,000க்கும் மேற்பட்ட நபர்கள் வேலையை இழந்துள்ளனர்.

மனிதவள துணையமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் முகமத் இதனை கூறினார்.

கடந்த 2020 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 293,639 நபர்கள் வேலை இழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் 75,615 தனிநபர்கள் வேலை இழந்துள்ளதால் உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்த, சில்லறை வர்த்தகத் துறை 43,614 பேர், ழில்முறை, அறிவியல், தொழில்நுட்ப நடவடிக்கைகள் 23,907
பேர், தகவல், தொடர்பு தொழில்நுட்பம் 19,931 பேர், தங்குமிடம், உணவு, பானங்கள் சேவை நடவடிக்கைகள் 23,124 பேர்,
கட்டுமானம் 21,233 பேர், போக்குவரத்து 20,953 பேர் வேலையை இழந்துள்ளனர்.

சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்கார் லிங் சாய் இயூ எழுப்பிய கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset