நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா செப்டம்பர் மாதம் வரை 1,358,718 டன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது: முஹம்மத் சாபு

கோலாலம்பூர்:

தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், கம்போடியா, இந்தியா, தைவான், தென் கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, மியான்மர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை 1,358,718 டன் அரிசியை மலேசியா இறக்குமதி செய்துள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புதுறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார். 

மலேசியா 549,824 டன் அரிசியை வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்துள்ள நிலையில் பாகிஸ்தான் (349,832), தாய்லாந்து (178,056), இந்தியா (229,451), கம்போடியா (38,397), மியான்மர் (12,575), கொரியா (250), தைவான் (170) ஜப்பான் (142), இந்தோனேசியா (13) மற்றும் ஸ்பெயின் (8)  டன் அரிசியை மலேசியா இறக்குமதி செய்துள்ளது.

அரிசி இறக்குமதியைக் குறைத்து விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, நிலையான உள்ளூர் அரிசி உற்பத்தியை உறுதி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புதுறை செயல்படுத்தி வருகிறது என்றார் அவர். 

தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பது, முறையான நடவு நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகியவை செயல்படுத்தப்பட்ட முயற்சிகளில் அடங்கும்,.

செகிஞ்சானில் பெரிய அளவிலான ஸ்மார்ட் ரைஸ் ஃபீல்ட்ஸ் (SMART SBB) திட்டத்தின் மூலம் அரிசி விளைச்சலை அதிகரிக்க ட்ரோன்கள் மற்றும் ஜென்டானம் போன்ற விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அமைச்சகம் ஊக்குவிக்கிறது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் அரிசியை நம்பியிருப்பதைக் கடக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் (பிஎன்-பேரா) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset