நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட்டில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டதா? யாரும் உளறிக் கொண்டிருக்க வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன் சாடல்

கோலாலம்பூர்:

பட்ஜெட்டில் இந்திய சமுகம் ஓரங்கட்டப்பட்டுள்ளது என யாரும் தேவையில்லாமல் உளற வேண்டாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது என குற்றம்சாட்டப்படுகிறது.

எந்த சமூகத்திற்கும் தனித்தனியாக நிதியை அறிவிக்க மாட்டேன் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பல முறை தெளிவாக கூறிவிட்டார்.

இருந்த போதிலும் மீண்டும் வரவு செலவு திட்டம் குறித்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

கல்வி அமைச்சுக்கு கிட்டத்தட்ட 64 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந் நிதி தேசியப் பள்ளிகளுக்கானதா அல்லது சீனப் பள்ளிகளுக்கானதா? அல்ல, அது அனைத்து பள்ளிகளுக்கானது.

இந்நிதியின் வாயிலாக தமிழ்ப் பள்ளிகளும் பயன் பெறும்.

அதே போன்று சுகாதார துறைக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானதல்ல.

கடந்த பட்ஜெட்டில் பிரிவ்-ஐ திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதன் வாயிலாக பயன் பெற்றனர்.

இதே போன்றுதான் பல திட்டங்களின் வாயிலாக இந்திய சமூகம் பயன் பெறும். 

ஆகவே பட்ஜெட்டை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் யாரும் உளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset