நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்தபட்ச ஊதியத்தை 1,700 ரிங்கிட்டாக உயர்த்துவதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

குறைந்தபட்ச ஊதியத்தை 1,700 ரிங்கிட்டாக உயர்த்துவதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் எச்சரித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசாங்கம் இந்த ஊதிய உயர்வை முன்மொழிந்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆனால் முதலாளிகளின் கண்ணோட்டம் உட்பட அனைத்துக் கோணங்களில் இருந்தும் இந்த பிரச்சினையை கருத்தில் கொள்வது முக்கியம்.

அதிக ஊதியம் காரணமாக முதலாளிகள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க நிர்பந்திக்கப்படலாம்.

இது நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

குறிப்பாக இது, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கலாம்.

ஆகவே, அரசாங்கம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் மக்களவையில் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset