நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அண்ணல் நபிகளாரின் அறிவமுதப்  பெருவிழா

கோலாலம்பூர்:

எதிர்வரும் 27ஆம்தேதி அக்டோபர் 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாலம்பூர் ஜாலான் இல்முவில்  அமைந்துள்ள மாஸா பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியம் மாஸா அவென்யுவில் அண்ணல் நபிகளாரின் அறிவமுதப்  பெருவிழா  நடைபெற இருக்கின்றது.

இந்த ஆண்டின் தேசிய மௌலிதுர் ரசூலின் கருப்பொருளான, நமது நாயகம் (ஸல்) அவர்களின் போதனையைக் கொண்டு நமது ஈருலக வாழ்வின் வெற்றியை நோக்கி  உண்மையாக உழைத்திட வேண்டும் என்னும் கருப்பொருளிலேயே இந்தப் பெருவிழா அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நமது நாட்டின் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களான கம்போங் பண்டான் இமாம் உஸ்தாத் முஹம்மது சாலிஹ் மன்பஈ, கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தலைமை இமாம் மௌலவி டாக்டர் செய்யது இப்ராஹிம் அல்-புஹாரி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சென்னை அடையார் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா டாக்டர் சதீதுத்தீன் பாகவி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

இந்த பெருவிழாவினை பெர்மிம், எம்.எம்.ஒய்.சி, பிரெஸ்மா, மாவார், சிம்ஸ், இஸ்லாமியக் கல்வி வாரியம் போன்ற அரசு சாரா அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

இம்மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெறும். 

இந்த நிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர் குழுவின் சார்பில் அஸ்ரின் கேட்டுக் கொண்டுள்ளார். 

தேநீர், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. தொழுகை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset