நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 4 மாதங்களில் 33.17 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்: 

பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 4 மாதங்களில் 33.17 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனை கூறினார்.

நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த பிரிவ்-ஐ திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 50 மில்லியன் ரிங்கிட் இத்திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்டது.

இதுவரை  33.17 மில்லியன் ரிங்கிட் கடனுதவி இந்திய தொழில் முனைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

அக்டோபர் 14 ஆம் தேதி வரை 384 இந்திய தொழில் முனைவோர் நன்மை அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதரவுடன், அதிகமான தொழில் முனைவோர் சவால்களை சமாளித்து அதிக வெற்றியை அடைய முடியும்.

பிரிவ்-ஐ திட்டம் தொழில் முனைவோர் துறையில் அதிக வெற்றிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் வெற்றி தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலைநகரில் உள்ள பேங்க் ரக்யாட்  துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் இந்திய தொழில் முனைவோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்று பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பல்வேறு துறைகள் தொழில்களில் முன்னேற்றத்தை  ஏற்படுத்த
பிரிப்–ஐ, தெக்குன் போன்ற அறிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வேளையில் நிதியுதவி பெற்ற தொழில்முனைவோருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset