நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்க்கரை பானங்களுக்கான தீர்வை வரி உணவு மற்றும் பானங்களின் விலைகளை பாதிக்காது: ஃபுசியா சாலே

கோலாலம்பூர்:

ஒரு லிட்டர் சக்கரை பானத்திற்கு 40 சென் தீர்வை வரி அமல்படுத்துவது உணவு, சக்கரை பானங்களின் விலைகளை பாதிக்காது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணையமைச்சர் ஃபுசியா சாலே கூறினார்.

வணிக உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் உணவு, பானங்களின் விலைகளை உயர்த்துவதற்கு தீர்வை வரியை ஒரு காரணமாகப் பயன்படுத்த கூடாது என்றும் அவர் தெரிவித்தார். 

பொது மக்கள் பயன்படுத்தப்படும் வழக்கமான சர்க்கரையின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இது உணவகங்களில் பானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்கரை முன்னதாக வரவுச் செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்க்கரைக்கான தீர்வை வரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர். 

குறிப்பிடப்பட்ட சர்க்கரை வரி என்பது பதிவு செய்யப்பட்ட பானங்கள் போன்ற அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட தயாரிப்புகளைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

- நந்தினி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset