நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை தொடரும்: சைஃபுடின் விளக்கம்

புத்ராஜெயா:

அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை தொடரும் என்று  உள்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்  தெரிவித்தார். 

செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை நெருங்குகிறது.

12- வது மலேசியத் திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சகம் நிர்ணயித்த நிபந்தனையால் நாட்டில் உள்ள மொத்த அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வழிநடத்தப்படுகிறது.

இது நாட்டின் மொத்த பணியாளர்களில் 157 சதவீதமாகும்.

அந்நியத் தொழிலாளர் வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டைத் திறப்பது குறித்த தீர்ப்பை அரசாங்கம் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்யும்.

எனவே, அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை அடுத்த அறிவிப்பு வரை தொடரும் என்பதை சைஃபுடின் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset