நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும் பொது போக்குவரத்தின் கட்டணம் உயராது: அந்தோனி லோக் 

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி அடிப்படை சம்பளம் உயர்ந்தாலும் பொது போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

பொது போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான தற்போதைய சம்பள விகிதம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று அந்தோனி லோக் வலியுறுத்தினார். 

சம்பந்தப்பட்ட சேவையின் கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை அந்தோனி லோக்  உறுதிப்படுத்தினார். 

விமானத் துறையில் சராசரி சம்பளம் ஏற்கனவே 1,700 வெள்ளிக்கு மேல் உள்ளது.

அதனால் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தாம் நினைக்கவில்லை என்றார் அந்தோனி லோக். 

ஏனெனில் இந்தத் துறையில் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும் தொழில்நுட்ப வேலைகள் அதிகம் என்று குளோபல் ஏவியேஷன்ஸ் பிரீமியர் ஏர் சர்வீசஸ் பேச்சுவார்த்தை நிகழ்ச்சிக்குப் பின்  செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தில் அடிப்படை சம்பளம் 1700 வெள்ளியாக உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset