நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உதவிகள் தொடர்பான தகவல்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும்: ஃபஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர்:

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உதவிகள் தொடர்பான தகவல்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை தகவல் தொடர்பு அமைச்சு மேற்கொள்ளும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு பல திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக பட்ஜெட்டில் உள்ள உதவித் திட்டங்கள் அனைத்தும் முறையாக மக்களை சென்றடைய வேண்டும்.'

அதற்கு அது தொடர்பான தகவல்கள் மக்களை சென்றடைய வேண்டும்.

ஆகையால் அமைச்சின் கீழ் இயங்கும் தகவல் இலாகா, மடானி சமூக இலாகா ஆகியவை இத்தகவல்கள் மக்களை சென்றடையைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

இதற்கான பொறுப்புகள் அவ்விரு இலாகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

உதவிக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் எவரும் போதுமான வழிகாட்டுதலைப் பெறுவதை இது உறுதி செய்யப்படும்.

பந்தாய் டாலாமில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset