நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் மானியம் திரும்பப் பெறுவதால் ஏற்படும் கொந்தளிப்பை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: ரபிசி

புத்ராஜெயா:

பெட்ரோல் மானியம் திரும்பப் பெறுவதால் ஏற்படும் கொந்தளிப்பை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

2025 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து பெட்ரோல் மானியங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

உணர்வுப்பூர்வமான கொள்கை அமலுக்கு வரும்போது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு தெரியும்.

இதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.

மானியம் நிறுத்தம் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் முடிவு இது.

பணவீக்கம் என்பது அரசாங்கத்தின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் இம்முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset