நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவல் சட்ட மசோதா நஜிப்பை விடுவிக்கும் முயற்சி அல்ல: அரசியல் ஆய்வாளர்

கோலாலம்பூர்:

பொது நலன் கருதி தண்டனை பெற்ற குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வாழ விட வேண்டாம்.

மலாயா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் முஹம்மத் தவ்பிக் இதனை கூறினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வீட்டுக்காவல் மசோதா, 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சிக்கும் தொடர்பில்லாததாக கருதப்படுகிறது.

மேலும் தடுப்புக்காவல், சிறை நடவடிக்கைகளுக்கான செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பக்கச்சார்பானது இந்த புதிய சட்டத்தின் வரைவு.

நஜிப்பை விடுவிப்பதற்காக மட்டும் புதிய மசோதாவை உருவாக்குவது சாத்தியமில்லை. 

ஒரு நபருக்காக மற்ற கைதிகளை வீட்டுக் காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அரசாங்கமோ அல்லது அம்னோவோ நஜிப்பை விடுதலை செய்ய வேண்டுமானால், அது இருப்பதாகச் சொல்லப்படும் துணைச் சான்று மூலம் செய்திருக்க வேண்டும். 

ஆனால், இது வரை எந்த தரப்பினராலும் உறுதி செய்யப்படவில்லை என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset