நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளிவாசலுக்குள் புகுந்து ஜெய்ஸ்ரீராம் என்று கத்துவது மத உணர்வுகளை புண்படுத்தாது: கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: 

பள்ளிவாசலுக்குள் புகுந்து ஜெய்ஸ்ரீராம் என்று கத்துவது மத உணர்வுகளை புண்படுத்தியதாகாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பளித்தார்.

2023 செப்டம்பர் மாதம், கர்நாடக மாநிலம் புத்தூர் கடப்பாவில், உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் இரவு 11 மணிக்கு மேல் இரண்டு மர்ம மனிதர்கள் புகுந்து, ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டு, அங்குள்ள நிர்வாகியை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்கள்

பள்ளிவாசல் நிர்வாகிகள் காவல் துறையில் புகார் அளிக்க, CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட கீர்த்தன் குமார், சசின் குமார் ஆகிய இரண்டு பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.  

தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இருவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, பள்ளிவாசலுக்குள் அத்துமீறி புகுந்து, ஜெய் ஸ்ரீராம் என்று கத்தி, மிரட்டல் விட்ட சம்பவத்தில் குற்றம் எதுவும் இல்லை.

பள்ளிவாசல் என்பது பொது இடம், தனியார் இடத்தில் நுழைந்தால் தான் அது அத்துமீறல். ஆகவே 447 IPC பொருந்தாது,

ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வது யாருடைய மத உணர்வையும் புண்படுத்தும் செயல் அல்ல, ஆகவே 295A IPC செக்சனும் பொருந்தாது என்று கூறி வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset