நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பள்ளி மாணவன் கைது

மும்பை:

கடந்த சில நாள்களாக சமூக ஊடகம் மூலம் தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவரை மும்பை காவல்துறை கைது செய்தது.

பெட்டிக் கடைக்காரரை சிக்க வைக்க இந்த மாணவர் போலி சமூக ஊடக கணக்கைத் தொடங்கி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மும்பையிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு எக்ஸ் சமூக வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அளிக்கப்பட்டது.

இந்த விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்புச் சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டறியப்பட்டது.

இதேபோல் டெல்லியிலிருந்து சிகாகோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 3 நாள்களில் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள், பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த மிரட்டல் விவகாரத்தை விசாரித்த மும்பை போலீஸார் சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவரை கைது செய்தனர்.

சிறுவனுக்கு 4 நாள்கள் காவல் வழங்கப்பட்டது.

மாணவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி வீட்டின் அருகேயுள்ள கடைக்காரருக்கும் மாணவருக்கும் இடையே நிதி விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.  

கடைக்காரரின் பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்கை தொடங்கிய மாணவர், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset