நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

206 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் குடியுரிமை தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர்:

குடியுரிமை உரிமைகள் தொடர்பான  சட்ட திருத்த மசோதா 2024 மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா இரண்டாவது வாசிப்பு கட்டத்தில் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் நிறைவு உரையின் பின்னர் தொகுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 206 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிராக வாக்களித்ததாகவும் மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் அறிவித்தார்.

14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகவில்லை. ஒருவர் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாசிப்புக்காக முன்வைக்கப்பட்ட இந்த திருத்தமானது குடியுரிமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக மலேசிய பெண்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை அந்தஸ்தை வழங்க சம உரிமை வழங்கும் இரண்டு திருத்தங்கள் அவற்றில் உள்ளன.

அந்த உரிமைக்காக கூட்டரசு அரசியலமைப்பில் இரண்டாவது அட்டவணையின் பகுதி II இன் பிரிவு 14 (1) (பி), பிரிவு 1 (பி) க்கு ஒரு திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset