நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள்- வேன் விபத்து: முதலாம் ஆண்டு மாணவர் மரணம்

பாலிங்: 

கம்போங் சரோக் புத்தே அருகிலுள்ள பாலிங் /வெங்/தஞ்சோங் பாரி சாலையில் மோட்டார் சைக்கிள்- வேன் இடையே ஏற்பட்ட சாலை விபத்தில் முதலாம் ஆண்டு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஶ்ரீ பாயு தேசிய பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது 10 வயது சகோதரருக்கு கழுத்து மற்றும் மூட்டுகளில் காயங்கள் ஏற்பட்டன.

அவர்களின் 10 வயது நண்பருக்கும் வலது கால் உடைந்தது.

நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் விபத்து தொடர்பான தகவல் அவரது தரப்புக்கு கிடைத்ததாக பாலிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் Superintendan Azmi Mokhtar கூறினார்.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இரண்டு சகோதரர்களின் மாமாவுக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்தது. 

முதற்கட்ட விசாரணையில், வேனை 22 முதல் 46 வயதுக்குட்பட்ட இரவுச் சந்தை வியாபாரி ஓட்டி சென்றுள்ளார். உடன் இருவர் இருந்துள்ளனர். 

வேன் கம்போங் லண்டாய், சிக் திசையிலிருந்து கம்போங் பண்டாருக்குச் சென்று கொண்டிருந்தது. 

இடதுபுறச் சந்திப்பில் இருந்து திடீரென வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க நேரமில்லாததால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

வேன் மோட்டார் சைக்கிளின் வலது முன்பக்கத்தில் மோதியது, இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தூக்கி எறியப்பட்டு சாலையின் வலதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.

மற்ற இருவரும் வேனின் டயர்களில் சிக்கிக் கொண்டனர் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார். 

காயமடைந்த சிறுவன்  சிகிச்சைக்காக பாலிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 

வேன் ஓட்டுநருக்கு வலது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது பயணிக்கு காயம் ஏற்படவில்லை. 

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- சாமுண்டிஸ்வரி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset