நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டம்: மக்களின் நம்பிக்கையைப் பூர்த்திச் செய்யுமா? 

பெட்டாலிங் ஜெயா : 

இன்று சமர்ப்பிக்கப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் குறிப்பாக  B40, M40 குழுவினரின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் இருக்கலாம். 

நகர்ப்புற வாழ்க்கைச் செலவைக் கையாள்வதற்கான முயற்சிகள் உட்பட M40 குழுவில் கவனம் செலுத்துவதுடன் கூடுதலாக B40 குழுவிற்கு வழங்கப்பட்ட மானியங்களை அரசாங்கம் திரும்பப் பெறாது என்பது நம்பிக்கைகளில் ஒன்றாகும். 

B40 குழுவைச் சார்ந்த மக்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தால் செய்யப்பட்ட சில மானியங்களின் ஒருங்கிணைப்பு தினசரி செலவினங்களின் அடிப்படையில் அவர்களுக்குச் சில விளைவுகளை ஏற்படுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டம் விவசாயிகள், மாணவர்கள், குடியேற்றவாசிகள், மீனவர்கள் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி மற்றும் பண உதவி போன்ற அடிப்படை உதவிகள் பொதுவாக கிடைக்கின்றன. மற்ற விஷயங்களுக்கான மானியங்களை திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்யலாம் என்ற கவலை மக்களுக்கு உண்டு. 

அரிசியிலிருந்து சமைக்க தேவையான பூண்டு வெங்காயம் போன்ற அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக இந்த வரவுச் செலவு திட்டம் அமையும் என்று பொது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

- நந்தினி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset