நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முத்தம் கொடுப்பதன் மூலம் எச்ஐவி நோய் பரவாது: ஆய்வில் தகவல் 

கோலாலம்பூர்: 

முத்தம் கொடுப்பதன் மூலம் எச்ஐவி நோய் பரவாது என்று ஆய்வு கூறுகிறது. 

எச்ஐவி வைரஸ் உமிழ் நீரில் மிகச் சிறிய அளவில் இருக்கும். அதனால் எச்ஐவி நோய் பரவ சாத்தியம் இல்லை. 

உண்மையில், உமிழ்நீரில் எச்.ஐ.வி வைரஸைத் தடுக்கும் சுரப்பிகள் உள்ளன. இது 
வைரஸை திறம்பட பரப்புவதைத் தடுக்கிறது.

எச்ஐவி முதன்மையாக இரத்தம், விந்து, பிறப்புறுப்பு,மலக்குடல் திரவங்கள் மற்றும் தாய்ப்பால் மூலம் பரவும். 

காரணம் இவை இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. 

கட்டிப்பிடித்தல், கைகுலுக்குதல், உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற சாதாரண தொடர்புகள் எச்ஐவி பரவும் அபாயத்தை ஏற்படுத்தாது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset