நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒழுங்கற்ற நடவடிக்கையில் ஈடுப்படுவதைத் தடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்: ரஸாருடின் தகவல் 

கோலாலம்பூர்:

போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக  காவல்துறை அதிகாரிகளிடையே அவ்வப்போது சிறுநீர் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அரச மலேசியக் காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின்  ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த பத்தாண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் குற்றச் செயல்களில் கூட ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துக் காவல்துறையில் உள்ள துறை நிர்வாகம் தங்கள் மேற்பார்வையின் கீழ் உள்ளவர்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஊழல், போதைப்பொருள் துஷ்பிரயோகம் அல்லது பிற குற்றங்களில் ஈடுபட்ட எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரச மலேசியக் காவல்படையின் மாதாந்திரக் கூட்டத்தின் போது அவர் கூறினார்.

- கௌசல்யா & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset