நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தை பிரதமர் அன்வார் தாக்கல் செய்கிறார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் உள்ளூர் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இது பிரதமர் அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்தின்  கீழ் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வரவுசெலவுத் திட்டமாகவும். 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மடானி பொருளாதார கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அதேவேளையில் நிலையான நிர்வாகம், பொதுச்சேவை துறை, நிதி நிர்வாகம் ஆகியவற்றை முன்னோக்கி செல்லும் அம்சமாக இருக்கும்.

மேலும், இந்த வரவுச் செலவுத் திட்டத்தை நாட்டின் நல்லாட்சி, பொதுத்துறை சீர்திருத்தம், அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இது மடானி அரசாங்கத்தின் இலக்குகளை அடைய முடியும் என்பதை உறுதி செய்கின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset