நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய்: இந்தியப் பெண்கள் முதலிடம் 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

அதிலும் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என்று சுகாதார அமைச்சின் மார்பக மற்றும் நாளமில்ல அறுவை சிகிச்சை சேவை பிரிவு தலைவர் Datuk Dr Imi Sairi Ab Hadi நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 2020-ஆம் ஆண்டில் பதிவானதைக் காட்டிலும் கடந்து 5 ஆண்டுகளில் 23 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் நிபுணர் தெரிவித்துள்ளார். 

அதிலும் குறிப்பாக 17 இந்தியப் பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதையும் ஆய்வு காட்டுவதாக அவர் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து 19 சீனப் பெண்களில் ஒருவருக்கும் 26 மலாய் பெண்களில் ஒருவருக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 

2020-ஆம் ஆண்டுக்கு முன்னர் 27 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 

புகைபிடித்தல், மது அருந்துதல், உணவுமுறை போன்ற காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 90 விழுக்காடு வரை உள்ளது.

மார்பகப் புற்றுநோய் மூன்று , நான்காம் கட்ட நிலையில் இருந்தால் சிகிச்சை வழங்கப்பட்டாலும் அவர்கள் 20 விழுக்காடு மட்டுமே உயிர் வாழும் சாத்தியம் இருப்பதையும் Datuk Dr Imi Sairi Ab Hadi சுட்டிக் காட்டினார். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் 35 வயதுடைய பெண்களுக்கு அதிகளவில் மார்பக நோய் ஏற்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset