நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவிலிருந்து 377 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

கோத்தா கினாபாலு:

மலேசியக் குடிநுழைவுத் துறை சபாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய  377 பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது. 

23 மாத வயதிற்குட்பட்ட எட்டு குழந்தைகள் உட்பட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சண்டாகான் துறைமுகம் வழியாக தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பு வைக்கப்பட்டதை சபா குடிநுழைவுத் துறை இயக்குனர் எஸ். எச். சிட்டி சலேஹா ஹபீப் யூசோஃப் தெரிவித்தார். 

பிலிப்பைன்ஸில் உள்ள Zamboanga நகர துறைமுகத்துக்கு நேரடியாக கடல் போக்குவரத்தின் மூலம் அவர் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, 11 மாதங்கள் முதல் 71 வயதுக்குட்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறியவர்களும் குடிநுழைவு சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு ஒழுங்குமுறைகள் 1963 இன் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்தனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுவரை, 4,800 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

- கௌசல்யா & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset