நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.

பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் அறிவிக்கவிருக்கும் பட்ஜெட் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்ப்படுகிறது.

ஆனால் நாளைய பட்ஜெட்டில் இன்னும் கூடுதல் நிதி ஒடுக்கப்பட வேண்டும்.

அதே வேளையில் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

இதுவே எனது எதிர்பார்ப்பு என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset