நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்பிஐ முன்னாள் தலைமை இயக்குநர்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்: அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

எம்பிஐ முன்னாள் தலைமை இயக்குநர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

மணல் சுரங்க ஊழல் தொடர்பிலான வழக்கின் விசாரணைக்கு உதவ எம்பிஐ எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் இன்கார்ப்பரேஷன் முன்னாள் தலைமை இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்  நீதிமன்றம் அனுமதியளித்தது.

எம்ஏசிசி அவரை மீண்டும் கைது செய்து, காவலில் வைக்க அனுமதி பெற்றுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட சில நபர்கள் லஞ்சம் பெற்றதாக தகவல் கிடைத்ததும் எம்பிஐ சம்பந்தப்பட்ட 20 திட்டங்களையும் எம்ஏசிசி கண்காணித்து வருகிறது.

ஆனால் அத்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset