நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து சென்னைக்குக் குரங்கு, பச்சோந்திகள் கடத்தல்: பெண் பயணி உட்பட 2 பேர் கைது

சென்னை:

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பச்சோந்திகள், குரங்குகள் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தில் விமான நிலையச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணியாக வருகை தந்த பெண் ஒருவர் இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகளை வைத்திருந்த நிலையில் அதில் என்ன இருக்கிறது என சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டபோது சரியாகப் பதில் கூறாமல் மழுப்பியதாக தெரிகின்றது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை நிறுத்தி கூடைகளை ஆராய்ந்து பார்த்தபோது ஆப்பிரிக்காவிலிருந்து எடுத்துவரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய சோதனையில் அந்தக் கூடையில் 52 ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள், நான்கு ஆப்பிரிக்க நாட்டு குரங்குகள் இருந்துள்ளன. 

இதனையடுத்து அந்தப் பெண் பயணியை விமான நிலையத்தில் விட்டு வெளியில் அனுப்பாமல் ஓர் அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதுடன் பெசன்ட் நகர் ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப் பிரிவு துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து கடத்தலில் ஈடுபட்ட மலேசியப் பெண் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் இந்த உயிரினங்களை வாங்கி செல்ல சென்னையை சேர்ந்த ஒரு நபர் விமான நிலையத்தில் வெளி வாளாகத்தில் காத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் அவரையும் கைது செய்துள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேற்று அதிகாலை சென்னையிலிருந்து மலேசியா கோலாலம்பூர் சென்ற தனியார் விமானத்தில் இந்த உயிரினங்களை மலேசியாவிற்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.

- நந்தினி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset