நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபானான் தாக்குதலில் MALBATT இராணுவப் படை பாதிக்கப்படவில்லை: காலிட் நோர்டின் 

கோலாலம்பூர்: 

லெபனானிலுள்ள 850-11  (MALBATT) மலேசிய இராணுவ படை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் தெரிவித்தார். 

ஹிஸ்புல்லாக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில்  (MALBATT) மலேசிய இராணுவ படை வீரர்களுக்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். 

மேலும், தெற்கு லெபனானில்  இயங்கும் MALBATT 850-11 உட்பட ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (UNIFIL) கீழ் உள்ள அனைத்துப் படைகளும் ரோந்து நடவடிக்கைகள் அல்லது தளவாட இயக்கங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதோடு, அனைவரும் தத்தம் இடத்தில்  இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள்  வரும் வரை UNIFIL குழு உத்தரவிடப்பட்ட  நடைமுறையின்படி செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.  

தற்காப்பு அமைச்சகம் தெற்கு லெபனானின்  நிலைமையைத்  தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

 MALBATT 850-11 குழு தொடர்பான அண்மைய நிலவரங்களைத் தற்காப்பு அமைச்சகம் அவ்வப்போது வெளியிடும் என்றார் அவர். 

நாடாளுமன்றத்தில் MALBATT 850-11 குழு தொடர்பான அண்மைய நிலவரங்களை கேட்ட தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ இக்மால் ஹிஷாமின் கேள்விக்கு காலிட் நோர்டின் இவ்வாறு பதிலளித்தார்.

- சாமுண்டிஸ்வரி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset