நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 ஆண்டுகளில் 3,847 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் பதிவு: சைஃபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்:

2020-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 3,847 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

நண்பர்கள், காதலர்களைப் பின் தொடர்வது, குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது, சுதந்திரமாக வெளியே சுற்றி திரிய வேண்டும் என்ற எண்ணம் ஆகிய காரணங்கள் இந்த நாட்டில் குழந்தைகள், பதின்ம வயதினர் காணாமல் போவதற்கான முக்கிய காரணங்களாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார்.

ஆண்டுக்குச் சராசரியாக  770 குழந்தைகள், பதின்ம வயதினர் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 

பதிவு செய்யப்பட்ட 3,847 சம்பவங்களில் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையர்களின் காணாமல் போனவர்களில் 96 விழுக்காட்டினரைக் காவல்துறை மீண்டும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

10 பேர் மீட்பதற்குள் மரணமடைந்துள்ளனர். 

காணாமல் போன குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வயதைப் பொறுத்தவரை, 13-15 வயதுக்குட்பட்டவர்கள் 54 சதவீதமாகவும், 16-18 வயதுக்குட்பட்டவர்கள் 37 சதவீதமாகவும் உள்ளனர் என்று சைஃபுடின் வலியுறுத்தினார்.

மேலும், காணாமல் போனவர்களில் ஆண்களைக் (26%) காட்டிலும் பெண்களே(76%) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, குற்றவியல் புலனாய்வுத் துறை ஏற்கனவே காணாமல் போன குழந்தைகள் தொடர்பான சம்பவங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

- கௌசல்யா & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset