நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவில் இல்லாதவர் கட்சியை விட்டு விலகுவது ஓர் அரசியல் நாடகம்: சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர்:

மஇகாவில் இல்லாதவர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பது ஓர் அரசியல் நாடகமாகும்.

மஇகா மத்ய செயலவை உறுப்பினரும் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவருமான சிவசுப்பிரமணியம் இதனை கூறினார்.

நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராஃப் போராட்டம் நடத்தியவர்களுடன் கைகோர்த்து கேஸ் இயக்கத்தின் சார்பில் ஆலயங்கள்தோறும் சென்று மஇகா மீது  அவதூறு பரப்பியவர்களுடன் தானும் இணைந்து,

சொந்தக் கட்சிக்கு இரண்டகம் செய்த ஒருவர், இப்பொழுது மஇகாவை விட்டு விலகுவதாகவும் இன்னொரு கட்சியில் சேருவதாகவும் ஊடகவெளியில் நாடக வெளிச்சம் தேடுகிறார்.

மஇகாவுடன் அண்மைக் காலமாக ஒட்டும் இன்றி, உறவும் இல்லாமல் இருப்பதுடன், மஇகா மத்திய செயலவை முன்னாள் உறுப்பினர் என பல முன்னாள் அடையாளங்களைச் சேர்த்துக் கொண்டு  இப்பொழுது இன்னொரு கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் காக்கும் கரங்கள் மஇகா என்பதை, இந்திய சமுதாயம் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது.

இந்தப் பேரியக்கம் தற்பொழுது தேசியத் தலைவர் டான்ஶ்ரீ  ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

போகிற இடத்திலாவது அவர் விசுவாசமாக விளங்கட்டும் என்றும் இனியும் மஇகாவை சீண்டுவதை விட்டுவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset