நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் உருமாற்றத் திட்டங்களுக்கு மித்ரா மட்டும் போதாது: ஐ25 கூட்டமைப்பு வலியுறுத்து

பெட்டாலிங்ஜெயா:

இந்தியர்களின் உருமாற்றத் திட்டங்களுக்கு மித்ரா மட்டும் போதாது என்று ஐ25 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு தான் ஐ25 ஆகும். இதில் 22 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார உருமாற்றத்திற்கு கூடுதல் நிதியை பிரதமர் ஒடுக்க வேண்டும்.

குறிப்பாக மித்ராவின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு விட்டு கூறுவது நியாயம் அல்ல.

காரணம் இந்திய சமுதாய உருமாற்றத்திற்கு மித்ரா மட்டும் போதாது.

காரணம் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2017ஆம் ஆண்டு உருவான மலேசிய இந்தியர் பெருந்திட்டம் போன்ற திட்டம் தேவை.

அதே வேளையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்களையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐ25 கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்பி நாதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset