நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்த புதிய “நீதி தேவதை” சிலை: சமத்துவத்தின் புதிய முகம்

டெல்லி:

இந்தியாவின் உச்சநீதிமன்றம் சமீபத்தில் பாரம்பரியக் கொள்கைகளிலிருந்து விலகிய புதிய “நீதி தேவதை” (Lady Justice) சிலையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண் கட்டும் துணி மற்றும் கையில் வாள் நீக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, இந்தியச் சட்டம் தண்டனையைக் காட்டிலும் அனைவருக்கும் சமமான நீதி வழங்குவதை முன்னோக்காகக் கொண்டுள்ளது என்பதைக் கூறுகிறது.

புதிய வடிவமைப்பில், நீதி தேவதை இந்திய அரசியலமைப்பின் பிரதியை கையில் தாங்கி நிற்கிறார், சமநிலையை சுட்டிக்காட்டும் தராசு முன்பது போலவே நீடிக்கிறது.

தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் இந்த மாற்றத்தைக் குறித்து உரையாற்றியபோது, இது இந்திய நீதிமுறையின் புரட்சிகரமான மாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும், நவீன காலத்திற்கேற்ப சமூக நீதியை முன்னெடுக்கும் புதிய வழிகாட்டுதலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சின்னம், இந்திய நீதித்துறை சமநிலை, நீதிமுறையின் ஊழியத்தை வெளிப்படுத்தும் மறுபரிசீலனையாகக் கருதப்படுகிறது. சமூக ஊடகங்களில் இதற்கு மிகுந்த வரவேற்பும் விவாதமும் உருவாகியுள்ளன.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset