நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானுவில் RM 410 வெள்ளிக்கு நாசிக் லெமாக் வாங்கிய வாடிக்கையாளர்

கோல திரெங்கானு: 

திரெங்கானு, டுங்குனில் பிரபலமான Ma Ani Selera Kampung என்றழைக்கப்படும்  சாலையோர நாசி லெமாக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் திரெங்கானுவில் RM 410 வெள்ளிக்கு நாசி லெமாக் வாங்கிய காணொலி சமூக ஊடகத்தின் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. 

@umi_nasi_lemak என்ற டிக் டோக் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொலியில் வாடிக்கையாளர் பல்வேறு கடல் உணவு வகைகளுடன், ஏழு பொட்டலம் நாசி லெமாக் வாங்குவதைக் காட்டுகிறது. 

நாசி லெமாக் உடன், மற்ற கடல் உணவுகளான கனவாய், லோப்ஸ்டர், பெரிய வகை இறால், பொறித்த கோழி, காடை முட்டை, மீன் ஆகியவைச் சேர்த்து சூடான சம்பல் உடன் வாடிக்கையாளர் 7 பொட்டல நாசி லெமாக்கை 410 வெள்ளி வாங்கியுள்ளார். 

இந்த காணொலி 1.8 மில்லியன் பார்வையாளர்களையும் 53,300 விருப்பங்களையும் பெற்ற நிலை நாசி லெமாக்கின் விலை பொது மக்களிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

இருப்பினும் ஒரு சிலர் கனவாய், லோப்ஸ்டர், பெரிய வகை இறால் ஆகியவற்றின் விலை அதிகம் தான் என்று தெரிவித்துள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset