நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாவி மொழி கற்பிக்கும் முஸ்லிம் அல்லாத ஆசிரியை Loren Fren-க்குக் குவியும் பாராட்டுகள் 

கோலாலம்பூர்: 

முஸ்லிம் அல்லாத ஆசிரியை Loren Fren மாணவர்களுக்கு ஜாவி மொழி கற்பிக்கும் காணொலி சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு வெண்பலகையில் ஜாவி எழுத்துகளை எழுதி அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் காணொலியை ஆசிரியை Loren Fren தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

ஆசிரியை எவ்வாறு உச்சரிக்கின்றாரோ  அவ்வாறே மாணவர்களும் சரியாக உச்சரிக்கின்றனர். 

அவ்வப்போது ஜாவி மொழி கற்றுக் கொடுக்க தனக்கு அரிதாகவே வாய்ப்பு கிடைப்பதாகவும் அதனால் தான் கற்றுக் கொடுத்ததை அனைவரும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக காணொலியாக அதனை பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

ஜாவி மொழி  2020 ஆம் ஆண்டிலிருந்து நான்கு முதல் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் மலாய் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. 

இதனிடையே ஜாவி மொழி கற்பிக்கும் ஆசிரியை Loren Fren-னின் காணொலியை முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset