நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோபி போன்ற நாய்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

நாட்டில் கோபி போன்ற நாய்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மஇகா தலைமை பொருளாளர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

திரெங்கானுவில் கோபி என்ற நாய் பெசுட் மாவாட்ட மன்ற அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்நாய் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, மனிதநேயம், தவறான விலங்கு சட்டங்களில் மாற்றங்களின் தேவை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாயிலா ஜீவன்களைப் பிடித்து கொல்வதற்கு அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதை விட அதை விட பெரிய பிரச்சினைகளின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக போதைப் பித்தர்கள், வழிப்பறி கொள்ளை, மாட் ரெம்பின் போன்ற பிரச்சினைகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தலாம்.

ஆகையால் சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நாயாக கோபி இருக்க வேண்டும்.

வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்ககக் கூடாது.

மேலும் சாலைகளில் சுற்றி திரியும் விலங்களை பாதுகாக்க அது தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset