நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாழ்க்கை செலவினத்தால் பாதிக்கப்படும் மக்கள்; 2025 பட்ஜெட் உறுதுணையாக அமையும்: பிரதமர் அன்வார் நம்பிக்கை

கோலாலம்பூர்: 

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் உறுதுணையாக விளங்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார் 

தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மக்களின் நல்வாழ்வு மேம்பாட்டிற்கும் சரிசமமாக அமையும் என்று அன்வார் இப்ராஹிம் கூறினார் 

நாட்டில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மடானி அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது 

உயர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்தே இந்த 2025 பட்ஜெட் அமையவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset