செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை:
ஏர் இந்தியா விமானத்தைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசரமாக தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் அந்த அச்சுறுத்தல் பொய்யானது என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மேலும் இரு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மும்பையிலிருந்து மஸ்கட் செல்லும் 6இ 1275, மும்பையிலிருந்து சவுதியின் ஜெட்டா செல்லும் 6இ 56 ஆகிய இரு இண்டிகோ நிறுவன விமானங்களுக்கு இன்று காலை தனித்தனியே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு விமானங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
’விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டது. பயணிகளுக்கு நேர்ந்த அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்’ என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 18, 2024, 10:04 pm
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
November 17, 2024, 5:17 pm
புல்டோசரால் இடித்து வீட்டை இழந்தவர்கள் இழப்பீடு கேட்க முடிவு
November 16, 2024, 9:56 pm
மோடி விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட ராகுல்
November 15, 2024, 4:32 pm
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
November 15, 2024, 3:31 pm
பறக்கும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக பயணி எச்சரிக்கை
November 15, 2024, 11:01 am