செய்திகள் கலைகள்
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
ஷா ஆலம்:
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 170-ஆவது திரைப்படமான வேட்டையன் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் மலேசியாவில் அதன் FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி பிரபல வர்த்தகரும் நடிகருமான டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ டிஎஸ்ஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட DSG-யை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரசிகர்கள் ஆராவாரத்தோடு வரவேற்றனர்.
மலேசியாவில் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் ஷா ஆலமிலுள்ள டிஎஸ்ஆர் திரையரங்கில் திரையிடப்பட்டது.
காலை மணி 7 முதலே இப்படத்தின் கொண்டாட்டங்கள் ஆரம்பமானது
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியை DAK EVOLUTION TRADING அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்திருந்தது.
இன்று நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சியில் அனைத்துத் திரையரங்களிலும் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரோக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
கூட்டத்தில் ஒருவன், ஜெய்பீம் படங்களை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி மற்றும் ரக்ஷன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
