
செய்திகள் கலைகள்
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
புதுடில்லி:
இந்தியாவின் 70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. 70ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று டில்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அதிபர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இதில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது.
இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm