நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்பு இல்லங்களில் வாழும் பிள்ளைகளும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

அன்பு இல்லங்களில் வாழும் பிள்ளைகளும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

டிஎஸ்கே குழுவின் தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு உருவானதுதான் டிஎஸ்கே குழு. இது தற்போது சங்கமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின்கீழ் பல சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிகள் செய்யப்படும்.

அவ்வகையில் இவ்வாண்டு அன்பு இல்லங்களில் வாழும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக தீபாவளியை,க் கொண்டாட வேண்டும் எனும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக இன்று கெப்போங்கில் உள்ள கருணை இல்லப் பிள்ளைகளுக்கு இன்று தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

அவர்களுக்கு உணவும் உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இம் முயற்சி அடுத்தடுத்த வாரங்களில் தொடரும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset