நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயதிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து சத்தம் போடும் தலைவர்கள் பதவியில் இருந்த போது எதை சாதித்தார்கள்?: பிரதமர் கேள்வி

சுபாங்ஜெயா:

இந்திய சமுதாயதிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து சத்தம் போடும் இந்தியத் தலைவர்கள் பதவியில் இருந்தபோது எதை சாதித்தார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இக்கேள்வியை எழுப்பினார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட்டும் தெக்குன் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.

இந்த 130 மில்லியன் ரிங்கிட் என்பது சிறப்பு நிதியாகும்.

இதைத் தவிர்த்து அரசாங்கத்தின் திட்டங்களின் வாயிலாக பல உதவிகள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்து என்ன செய்வது என்று என்னையும் மடானி அரசாங்கத்தையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

குறிப்பாக பல அரசியல் தலைவர்களும் அரசாங்கத்தை வேண்டுமென்றே கடுமையாக சாடி வருகின்றனர்.

ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் சம்பந்தப்பட்ட தலைவர்கள் பதவியில் இருந்த போது எதை சாதித்தார்கள் என்பது தான்.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்கள் பதவிகளை பயன்படுத்தி தங்களைத்தான் வளப்படுத்திக் கொண்டனர். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான இதுபோன்ற இனவாத குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சுபாங்ஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset